கனடாவின் ரொறன்ரோவில் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்த இரண்டு பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஒருவர் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் புட் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
தொழில் வாய்ப்பு வழங்குவதாக செய்யப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் பெண்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பம் செய்த பெண்ககளை அழைத்து வெவ்வேறு நேரத்திற்கு வருமாறு குறித்த நபர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சென்ற பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளன.
70 வயதான ஜேக்கப் நிமோ என்ற நபரை இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை கடந்த 21 ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபரின் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான வேறும் சம்பவங்கள் இடம் பெற்று அதில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.