கொரிய மொழி வகுப்பறைக்கான மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) மூலம் ,இலங்கையின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கும் வைபவம் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
இந்த வைபவம் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன தலைவர் ,பார்க் யங்சான் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்மூலம், பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களின் தொழில் மற்றும் பல்கலைக்கழகத்திற்கான நவீன கல்விப் பொருட்களைப் பெறுவதும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர்க்கான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்திற்கு , KOICA இலங்கை அலுவலகத்தின் நாட்டுப் பணிப்பாளர் கிம் மியுங்ஜின், கொழும்பு திறந்த பல்கலைக்கழகப் பதிவாளர், மொழித் துறைத் தலைவர் கலா சந்திரமோகன், பேராசிரியர் ஆண்டன் பியரத்ன மற்றும் கொரிய மொழி நிகழ்ச்சிக்கான இணைப்பாளர் நிரோஷா அபேசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருத்து தெரிவிக்கையில்,
“KOICA இலங்கைக்கும் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்துக்கும் பயனுள்ள உறவு உள்ளது. தரமான கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு இந்த நோக்கத்தின் திட்டங்கள் அவசியம். நவீன ICT உபகரணங்களை அணுக முடியாத மாணவர்கள் பலர் உள்ளனர். மற்றும் தரமான கல்வியை அணுகுவதற்கு KOICA வின் உதவி விலைமதிப்பற்றது மற்றும் பெரிதும் பாராட்டப்படுகிறது.கொரியாவின் பல்வேறு மேம்பாட்டு உதவித் திட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி வழிமுறைகளை மேம்படுத்த பல வழிகளில் உதவியது” என தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.”