தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தபால் மூல வாக்கு எண்ணிக்கையில் 13 மாவட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.
இதுவரையில் 15 மாவட்டங்களின் தபால் மூல வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் 13 மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை பெற்றுக்கொண்டுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவும் வெற்றியீட்டியுள்ளனர்.