திருகோணமலையில் தனது 106வது வயதில் நாட்டின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான மூத்த குடிமகன் தேர்தலில் வாக்கினை பதிவு செய்துள்ளார்.
திருகோணமலையின் மூத்த பிரஜையான 106 வயதான ஜோன் பிலிப் லூயிஸ் என்பவரே இவ்வாறு வாக்களிப்பினை அளித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை காலமும் குறிப்பாக 9 தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல்களிலும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு” எனவும், இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருக்கின்றேன் எனவும் முத்த முடிமகன் குறிப்பிட்டுள்ளார்.