கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (19) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வாக்கென்னும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்துத் தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்களாக உள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும் எட்டு வாக்கென்னும் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இதுவரை தேர்தல் தொடர்பான பதினொரு முறைப்பாடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு 40 பேருந்துகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.