கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தந்தையினால் உருவாக்கப்பட்ட விமானத்தை அவரது இரண்டு மகள்களும் அண்மையில் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
ஒன்றாரியோவின் குயிலெப் பகுதியில் இந்த விமானத்தை பார்வையிட்டுள்ளனர்.
ரோபட்டா லுயோ மற்றும் அவிலின் சுயி வொங் ஆகிய இருவரும் தமது தந்தை 90 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய விமானத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
1935 ஆம் ஆண்டு ராபர்ட் மற்றும் டொமி வொங் ஆகிய சகோதரர்களினால் தங்களது பதின்ம வயதில் விமானம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
சஞ்சிகை ஒன்றில் காணப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டிருந்தது.