இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி , இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் 158 முறைப்பாடுகளும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 379 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன், சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தமை தொடர்பில் 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் ஆவர்.
மேலும், இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.