நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டபோது மரம் ஒன்றில் தூக்கிட்டவாறு பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளதுடன் தேவாலதென்ன, கலஹகம, ஹக்கல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.