அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இளைஞன் ஒருவர் நடாத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - கென்டக்கி மாகாணம் லெக்சிங்டனுக்கு தெற்கே கிராமப்புற பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 75 நெடுஞ்சாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் தேடி வருகிறார்கள். இதையடுத்து சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும், துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் 32 வயதான ஜோசப் ஏ. கூச் என்பது தெரியவந்துள்ளது.