சிங்கள அரசுகளிடமிருந்து எமக்கு ஒருபோதும் தீர்வுகள் இல்லை, அவர்களுடன் செய்யப்படும் உடன்படிக்கைகள் எப்பபோதும் வெல்லப்போவதில்லை! அப்படித்தான் இமாலயப்பிரகடனமும்! புரிந்து கொள்ளுவோம்.
ஈழத்தின் பிராந்தியங்களின் சிங்கள பேரினவாத அடக்குமுறைக்குழுக்களால் பாதிக்கபட்ட குடும்பங்களில் இருந்து கிளர்ந்தெழுந்த இளைஞர் குழுக்களே பின்னாளில் இயக்கங்கங்களாக உருவெடுத்தது. அந்த இயங்கங்களில் பேரியக்கமாக உருவெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இறுதியல் ஈழத்தின் காவலர்களாக மாறியது நாம் அனைவரும் அறிந்த விடயம். அந்த கட்டுக்கோப்பான அமைப்பின் அங்கத்தவர்களாகவும், சகாக்களாகவும், பணியாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் பல்வேறு பரிணாமங்களில் உள்ள நாம் இறுதியில் தோற்றோம். அந்த தோல்விக்கு பின்னால் உள்ள அரசியல் சூட்சுமங்கள் குறித்து நாம் பேசவிரும்பவில்லை, ஆனால் அதற்கு எம்மோடு இருந்தவர்களே காரணமாக இருந்தார்கள். கூடவே இருந்து குழிபறித்த கும்பல்கள் இன்றும் அதே தவறை செய்து கொண்டிருக்கிறது.
சிங்கள பேரினவாத அரசு மற்றும் அதன் துணைக்கட்சிகள், குழுக்கள், ஆயுதபடைகள் என்பன யுத்தத்தை முடித்து கொண்டாடினார்கள் ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை அறியவும் மாட்டார்கள். 2009 மே மாதத்திற்கு பிறகு இன்றுவரை எமக்கான நீதி அல்லது தீர்வு என்பது கிடைக்கவில்லை, கிடைக்கப்போவதுமில்லை ஆனால் அதே சிங்கள அரசிடமிருந்து தீர்வுகள் பெற்றுதருவதாக சொல்லி பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் உருவெடுத்தது அவை அனைத்தும் இறுதியில் தோற்று போனதே வரலாறு.
புலம்பெயர் தேசங்களில் பல்வேறு அமைப்புகள் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தர முயற்சிகள் எடுப்பதாக சொல்லி நிதி சேகரித்து அவற்றை தங்கள் தனிப்பட்ட அரசியலுக்காக பயனபடுத்தியமை நாம் அனைவரும் அறிந்த விடயங்கள், ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளான ஐக்கிய இராச்சியம், கனடா, ஐரோப்பா, அவுஸ்தேலியா, ஆகிய பிராந்தியங்களில் அடையாளத்தை நிருபிக்க பல்வேறு ரீதியில் முயற்சிகள் மேற்கொண்டு அவற்றில் வெற்றியும் கண்டோம். அப்படித்தான் எமது அவலங்களையும் உரிமை மீறல்களையும் சர்வதேச அரங்கிற்கு நாம் கொண்டு சேர்த்தோம். அற்காக அதுதான் நமக்கான தீர்வு அல்ல,
கனடாவில் தமிழர்களின் பங்கு இங்கு முக்கியமானது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் தமிழர்கள் வரலாறு உள்ளது அதில் விடுதலைப்புலிகள் இயக்க முடிவுக்கு பின்னரும் முன்னரும் என்ற இரண்டு காலங்கள் உள்ளது, அதில் இயக்க முடிவுக்கு பிறது சிறிய சிறிய அமைப்புகள் பவ உருவெடுத்தது அவைகள் ஆங்காங்கே பணிசெய்து கொண்டு இருந்தது. முன்னர் உள்ள காலத்தில் தலைவரின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகளே பின்னாளில் கொள்களைகளை மறக்க தொடங்கியது. புலம்பெயர் தேசங்களில் அரசியல் பிரிவுகளாக செயற்பட்ட முக்கிய அமைப்புகள் பல தங்களின் சுய அரசியல் அபிலாசைகளுக்காக முடிவுகைளை மாற்ற தொடங்கியது.
அப்படியொரு முன்னெடுப்பை கனடாவின் முக்கிய அமைப்பொன்று செய்து பிறகு அதற்கு எதிராக பல விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்த அமைப்பு யாரிடம் நாங்கள் அவஸ்தைப்பட்டோமோ அவர்களிடம் நியாயம் தேடி முற்பட்டது, யாரால் நாங்கள் கொன்றழிக்கப்பட்டோமோ அவர்களிடம் தீர்வு கேட்டு மன்றாடியது,
ஈழத்தில் பௌத்த இனவாதிகள் பலமுறை எம்மை சித்திரவதை செய்தனர் அவர்களால் அரசியல் ரீதியாகவும், அடக்குமுறை ரீதியாகவும் நாங்கள் பாதிக்கப்பட்டோம். இவற்றை எவ்வாறு மறப்பது? முள்ளிவாய்க்காலில் கொத்தாக எம் தமிழனத்தை ஆயுத முனைகளில் அழித்தவர்களும் எப்படி கைகுலுக்க முடிந்தது? இன்றும் வலிகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது உறவுகளின் கஸ்டங்களை மறந்து இப்படியான அமைப்புகள் செயற்படும் விதங்களை மக்கள் எப்போதும் எதிர்ப்பர், நாம் அதனை கடந்த காலங்களிலும் பார்த்திருக்கிறோம்., அப்படியாக பல போராட்டங்கள் கனடாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் இடம்பெற்றது.
தமிழர் தெருவிழா இதுவரை காலமும் எந்தவித பிரச்சினைகளுமி்ல்லாமல் எமது கலாச்சாரத்தையும், பண்பாடையும் சொல்லும் நிகழ்வாக அரங்கேறியது. அதற்கு ஒருபோதும் தடை இருந்ததில்லை 2024 விழாவுக்கு மட்டும் ஏன் இப்படியான ஓர் எதிர்ப்பு? அதனை விரிவாக ஆசிரியர் தலையங்கம் சொன்னாலும் கொஞ்சமாக பேசலாம், இமாலய பிரகடனம் என்ற ஒன்றை செய்தவர்களே தமிழர்களுக்கு தலைமை வகிக்க அல்லது தமிழர்களின் விழாக்களை செய்யக்கூடாது என்பதே கோசம்!. எமது வலிகளை புரியாதவர்கள் எமது பண்பாடுகளை கொண்டாட தேவையில்லை இதனை அமைப்பு ரீதியாக எதிரக்கவில்லை ஆனால் மக்களே வீதிக்கு இறங்கி போராடினர், போராட்டம் என்றால் அழுகுரல்களும் கோசங்களும் இருக்கும், எப்போதெல்லாம் போராட்டங்கள் இருந்ததோ அங்கெல்லாம் எமது கொடி இருந்தது. இதற்கு பல விமர்சனங்கள் இருந்தது, ஆனால் அதை தடுக்க முடியாது காரணம் எம்மை ஒற்றுமைப்படுத்துவதே அந்த கொடிதான் அந்த பாடல்கள்தான், நாங்கள் நிகழ்வுக்கெதிரானவர்கள் இல்லை ஆனால், நிகழ்வை நடத்தும் கும்பல்களுக்கு எதிரானவர்கள் என்பதை போராட்டக்காரர்கள் சொன்னார்கள்.
இந்த போராட்டத்திற்கு முன்பதாக இப்படியான சமூக விரோத செயலை செய்தவர்கள் இந்த நிகழ்வின் பங்காளர்களாக இருக்க கூடாது என்பதை பல்வேறு முறையில் சொன்னாலும் அதனை குறித்த ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை, தமிழருக்கு எதிராக யார் வந்தாலும் அது தமினாய் இருந்தாலும் எதிர்ப்போம் என்பதே போராட்டத்தின் நோக்கம் என்பதை புரிந்து கொண்டால் சரி.