தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (30) ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளது.
இதனால், பதுளை ரயில் நிலையத்தில் இருந்து ஊழியர்களை வரவழைத்து தடம் புரண்ட ரயிலை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.