Bootstrap

வெல்லவாய, நெத்தமலுவ வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் !

வெல்லவாய, நெத்தமலுவ வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ பரவலினால் இருபது ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நெத்தமலுவ வனப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று இரவு முழுவதும் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியுள்ளது.

இந்த நாட்களில்  நிலவும் கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இன்று புதன்கிழமை (28) காலை குறித்த வனப்பகுதியில் சில இடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இன்னும் சில இடங்களில் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc