கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக இணையவழி மூலம் முன்கூட்டியே பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில் இன்று முதல் கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை பெறுவதற்காக வருபவர்களின் வரிசை அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 750 கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.