தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் முன்னுரிமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்னொழிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிகளாக, மாணவர் மைய நிதித்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாக ஒரு வருடத்தில் 50,000 பேர் வீதம் தொழில் அடிப்படையிலான பயிற்சி புலமைப்பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கல்.
இரண்டாம்நிலைக் கல்வி பயில்கின்ற மாணவர்களை இலக்காகக் கொண்ட 60,000 தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான வாய்ப்புக்களை வழங்கல் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தற்போது அரச மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாட்டுடன் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் திறைசேரியால் 2025 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் 05 வருடங்களுக்கு நிதியொதுக்கீடு செய்வதற்கும், தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் , அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழு மற்றும் கல்வி அமைச்சும் இணைந்த குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் , தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.