முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 221ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவுகூரல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஜீவன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மரியாதையும் செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதே திகதியில் போரிட்டு கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டாரவன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றைய நாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவுகூரல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.