இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதித்தேர்தல் நிலைவரம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் ரி.கலையரசன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ( 22 ) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், ஜனாதிபதித்தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்தனர்.
அதேபோன்று அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றைத் தாபிப்பதற்கும், கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் கிளை அலுவலகத்தினை நிறுவுவதற்குமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.