கனடாவில் சிறுவர் நலக் கொடுப்பனவு தொடர்பில் அரசாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறுவர் நலக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடிய சிறுவர் நலன்புரித் திட்டம் இது தொடர்பில் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் சிறுவர் நலன்புரி கொடுப்பனத் தொகை அதிகரிக்கப்பட்டது.
பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டது.
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பெற்றோருக்கு ஏற்படக்கூடிய பொருளாதார சுமைகளை கவனத்திற் கொண்டு அரசாங்கம் இவ்வாறு உதவி வழங்குகின்றது.
கனடாவில் வதியும் 18 வயதுக்கும் குறைந்த தகுதியான பெற்றோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
6 வயதுக்கும் குறைந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் 648.91 டொலர்களும், 6 வயது முதல் 17 வயது வரையிலான ஒவ்வொரு பிள்ளைக்கும் 547.50 டொலர்களும் வழங்கப்பட உள்ளது.
குடும்பத்தின் தேறிய வருமானத்தின் அடிப்படையில் சிறுவர் நலன்புரி உதவு தொகை நிர்ணயக்கப்பட உள்ளது.