இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற இடையூரின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிவரையான காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் நெலுவ பகுதியில் 191.5 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டதில் வலல்லாவிட்ட பகுதியில் 177 மில்லிமீற்றரும், ஹொரண பகுதியில் 120 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 116.5 மில்லிமீற்றரும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை 116 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தில் உடுகம பகுதியில் 115.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.