இஸ்ரேல் மீது ஈரானும் அதன் ஆதரவு குழுக்களும் இ;வ்வாரம் தாக்குதலை மேற்கொள்ளலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க தாக்குதல்களிற்காக நாங்கள் தயாராகயிருக்கவேண்டும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாங்கள் கடந்த சில நாட்களாக பிராந்தியத்தில் எனது பிரசன்னத்தை வலுப்படுத்திவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் எவ்வேளையிலும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் காண்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அடுத்த சில நாட்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்குஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்.
பென்டகன் இதனை தெரிவித்துள்ளது. எவ்35 போர்விமானங்களுடன் கூடிய யுஎஸ்எஸ் ஏபிரஹாம் லி;ங்கனை மத்திய கிழக்கிற்கு வேகமாக செல்லுமாறும் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்
இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் ஈரானின் இராணுவதயாரிப்புகள் அந்த நாடு இஸ்ரேலிற்கு எதிராக பாரிய தாக்குதலை திட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்த தனது அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள அன்டனி பிளிங்கென் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் மத்திய கிழக்கில் அமெரிக்கா படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிற்கு எதிராக பொருத்தமான தடுக்கும் நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை ஈரானிற்குள்ளது என ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.