கனடாவில் பிலிப்பைன்ஸ் சமூகத்தைச் சேர்ந்த 4 ஜோடிகள் ஒரே நாள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
நியூ ஃபவுண்ட்லாந்து மற்றும் லெப்ராடர் பகுதியைச் சேர்ந்த ஜோடிகளே இவ்வாறு ஒரே நாள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புனித தெரேசா தேவாலயத்தில் இந்த திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.
கிறிஸ்தவ திருமணங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து சடங்குகளும் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளில் சில ஏற்கனவே சட்ட ரீதியாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டவை என தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயத்தில் முறையாக திருமணம் செய்து கொள்வதற்காக இவர்கள் இந்த திருமண வைபவங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமண வைபவம் ஒன்றிற்கு ஏற்படக்கூடிய செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு ஜோடிகள் கூட்டாக இணைந்து திருமண பந்தத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.