எதிர்வரும் காலங்களில் மதுபானங்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ,750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 முதல் 1000 ரூபாவாகவும் 175 மில்லி லீற்றர் மதுபான போத்தலின் விலை 200 ரூபாவாகவும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்களின் விலை குறைந்துள்ளதால், மதுபானங்களின் விலையை குறைக்குமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் மதுபான உற்பத்தியாளர்களிடம் அண்மையில் கேட்டுக் கொண்டுள்ளார்.