யாழ் போதனை வைத்தியசாலையில் 50 பேர் வைத்தியர்களாக இருக்கின்றார்கள் என்றால் அதில் 10 பேர் தவறு செய்பவர்களாக இருக்கின்றார்கள் என அந்த வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்ககூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் , சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்க கூடிய விடயங்களில் மிக முக்கியமானவை மருத்துவதுறை சார்ந்த விடயங்களாகவே காணப்படுகின்றது.
இந்த பின்னணியில் மருத்துவதுறை சார்ந்த மற்றுமொரு விடயம் பேசுபொருளாகியுள்ளது.
யாழ் போதனை வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்ககூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.