பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவ நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்யவில்லையென இரா.சாணக்கியன் நேற்றைய தினம் (06) நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அடுத்து இன்று (07) சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.
கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக பல பெண்களது வாழ்க்கையை சீரழித்தும், தனது தலைவருக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கு போலி முகநூல் ஊடாக முகம் சுளிக்கும் வகையில் பதிவுகளை மேற்கண்ட நபர் இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.