கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் வெளியிட்டுள்ளன.
அண்மையில் கனடாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இருவரும் எவ்வாறு கனடாவில் குடியேறினர் என கான்சர்வேட்டிவ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கான்சர்வேட்டிவ் கட்சியின் அவை தலைவர் அன்ட்றூ ஷியர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
கனடிய குடியுரிமை வழங்கும் போது அவர்கள் தொடர்பான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தல் பலவீனமடைந்துள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டவர் ஒருவரை அங்கீகரிக்கும் போது அவருக்கு அவர் தொடர்பில் ஆய்வு நடத்தப்படுவது இல்லையா என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
62 வயதான பவுட் முஸ்தபா எல்டிடி மற்றும் அவரது மகன் 26 வயதான முஸ்தபா எல்டிடி ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தீவிரவாத சதி திட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த இருவருக்கும் கனடிய அரசாங்கம் எவ்வாறு குடியுரிமை வழங்கியது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இருவருக்கும் கனடாவிற்குள் குடிபெயர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டு உடைய நபர்கள் நாட்டில் குடியேறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என கொன்சர்வேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயமானது தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு முறைமையில் காணப்படும் பாரிய தோல்வி என கான்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.