நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party ) பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவுக்கு (Sri Lanka Podujana Peramuna) எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதற்கான சதித்திட்டம் ஒன்று தீட்டப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) தோற்கடிக்க சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, பொதுஜன பெரமுனவுக்கு (Sri Lanka Podujana Peramuna) எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.
இந்த குழு பல நாட்களாக கூடி இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு மூட்டை உரம் 50,000 ரூபாவாகவும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.