வடக்கு கோடைகால சுற்றுலாப் பருவம் தொடங்கியவுடன் ஜூன் மாதத்தில் உலகளாவிய விமானப் பயணிகளின் தேவை ஆண்டுக்கு 9.1% ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி இது தெரியவந்துள்ளது.
அதன் படி, ஜூன் மாதத்தில் விமானப் பயணிகளின் தேவை 8.5% வருடாந்த வேகத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சர்வதேச போக்குவரத்து ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.3% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடத்தை விடவும் சுமை காரணி 0.5 % வீதம் உயர்வடைந்து 85% ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்த IATA இயக்குநர், இவ்வாறு சுமை காரணி அதிகரிப்பது நல்லது மற்றும் சவாலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.