Bootstrap

வத்தளையில் 3 மாடி வீட்டில் பாரிய தீ : ஒருவர் உயிரிழப்பு!

 

  • வத்தளை மாடாகொடையில் உள்ள மூன்று மாடி கொண்ட  வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 90 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு  தகவல்  கிடைத்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று  பிரதேச மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
  • தீயை கட்டுப்படுத்திய பின் மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் தீக்காயங்களுடன் வயோதிபர் ஒருவர் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • உயிரிழந்த வயோதிபரின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
  • தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc