மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் பிறப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவிலிருந்து நேற்று (01) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்வைப்பீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை வேட்பாளர் தெரிவு செய்யப்படவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
சீன ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாகவும், சீன அரசாங்கம் இலங்கை தொடர்பில் முனைப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களுக்கும் பொதுவாக இலங்கையின் ஜனநாயகத்துக்கும் பாரிய இழப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்