வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் இதில் பெரும்வாரியாக ஹிந்துக்களை தமிழர்கள் என்றும் இஸ்லாமியர்களை முஸ்லிம்கள் என்றும் கிறிஸ்தவர்களை வேதக்கரர்கள் என்றும் அழைக்கிறார்கள் ஆனால் மூன்று மதத்தினை பின்பற்றுபவர்களும் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் அனைவருக்கும் உரிமைசார் பிரச்சினைகள் ஒன்றாகவே இருக்கிறது.
காணி உரிமை, மத உரிமை, கல்விசார் உரிமை என பல பிரிவுகளில் அரசின் அடக்குமுறைகள் இவர்கள் மீது பாய்கிறது. ஆனால் இந்த மூன்று மத மக்களும் தங்களுக்குள் நீண்டகாலமாக பிணக்குகளை பேணி வாழ்ந்து வருகிறார். பொதுவாக ஒற்றுமையாக செயற்படுவது போல தென்பட்டாலும் உள்விவகாரங்களில் வேறாக இயங்குகிறார்கள். இதனை சரியாக இந்த மதசார்பு கட்சிகள் செய்து வருகிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் இவர்களுக்கு மத்தியில் காணப்படுகிறது. இவைகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மத அடிப்படையில்தான் அமைந்துள்ளது. இதனால் இந்த கட்சிகளின் தலைவர்கள் தமிழராக இவர்களை ஒன்றிணைய விடாமல் தடுத்து வருகிறார்கள் என்பதை மூன்று தசாப்தங்களாக அவதானிக்க முடிகிறது.
இந்த நிலை மாறினாலேயே இந்த பகுதி சிறுபான்மை மக்களுக்கு தீர்வுகள் வரும் என்பது எனது நிலைப்பாடு, அத்துடன் இந்த பகுதிய சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், பாடசாலைகள் என்பன இந்த ஒற்றுமை சீர்குலைப்பில் தாக்கம் செலுத்துகிறது.
இது தவிர தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இனவாத கும்பல்கள், பௌத்த ஆதிக்க சக்திகள், வெளிநாட்டு இயக்கங்களின் ஆக்கிரமிப்புகள் என்பன இவர்களை சேர விடாமல் தடுத்து வருகிறது. எப்படி ஒற்றுமைக்கான வழிவகைகளை செய்தாலும் இந்த பிரிவினைகள் உண்டாகி கொண்டே வருகிறது.
அடுத்த தலைமுறையாவது இந்த பிணக்குகளில் இருந்து விலகி ஒற்றுமை பாதையை தெரிவு செய்து உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதே எனது அவா.