Bootstrap

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பேராளர் மாநாடும் யதார்த்தங்களும்

நாச்­சி­யா­தீவு பர்வீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் 33 ஆவது பேராளர் மாநாடு எதிர்­வரும் 22.06.2024 சனிக்­கி­ழமை அன்று காத்­தான்­குடி ஹிஸ்­புல்லாஹ் மண்­ட­பத்­தில் ­ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சின் ­த­லைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. காத்­தான்­கு­டிக்­கும் ­ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்கும் நீண்ட நெடுங்­கால தொடர்பும் வர­லாறும் இருக்­கின்­ற­து என்ற வகையில் முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மா­க ­அ­ர­சியல் அடை­யாளம் பெற்று பின்னர் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு எதி­ரான பாச­றை­க­ளில் ­அ­ர­சியல் செய்து மீண்டும் தாய்க்­கட்­சி­யோ­டு ­இ­ணைந்து செயற்­ப­ட ­வந்­துள்ள ஹிஸ்­புல்லாஹ்வின் மீள்­வ­ரு­கை­யை ­கட்­டியம் கூறும் நிகழ்­வா­கவும் இந்த பேராளர் மாநாடு அமைந்­துள்­ளதோ என்றும் எண்­ணத்­தோன்­று­கி­றது. ஹிஸ்­புல்லாஹ்­வின் ­மீள்­வ­ரு­கை­யில் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர் ­ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சின் ­பி­ரதி தலை­வர்­களில் ஒருவர் அலி சாஹிர் ­மௌ­லானா, முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் யூ.எல்.முபீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ­அ­டி­மட்ட போரா­ளி­களின் பெருந்­தன்மை இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஒரு விட­ய­மாகும். அத்­தோடு மீண்டும் அவர் கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­விட்டுச் சென்­று­வி­டாமல் இருக்­க­வேண்டும்.

பேராளர் மாநா­டுகள் வெறு­மனே ஒரு கட்­சியின் இருப்பை காட்­டிக்­கொள்­வ­தற்­கா­க ­அல்­லது பத்­தோடு பதி­னொன்­றாக நாங்­களும் ஒரு தேசிய கட்­சிதான் என்­பதை காட்­டு­வ­தற்­காக நடை­பெ­று­வ­துண்டு. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ­பே­ராளர் மாநா­டு­கள் ­பொ­து­வா­க­வே ­மேற்­சொன்ன கண்­து­டைப்­பு­க­ளை ­தாண்­டிய அல்­லது அதற்­கு ­அப்­பாற்­பட்ட செயற்­பா­டு­களைக் கொண்­டது என்­ப­தனை கடந்த காலங்­களில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸின் ­பே­ராளர் மாநா­டு­களை அவ­தா­னிக்கும் போது தெரிந்­து­கொள்­ள ­மு­டியும்.

இன ­ரீ­தி­யான கட்­சி­யொன்­று ­முஸ்­லிம்­க­ளுக்கு தேவை­யில்லை என்று அவ்­வப்­போது சிலர் சொல்­வ­தையும், எழு­து­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. ஆனால் மிக நீண்ட கால வர­லாற்றை கொண்ட தமி­ழ­ரசு கட்சி மற்றும் சிங்­கள இன­ரீ­தி­யாக உரு­வாக்­கப்­பட்ட சிஹல உறு­மய, ராவணா பல வேகய, பொது­பல சேனா அமைப்­பி­னரின் கட்சி போன்­ற­வற்றை இவ்­வாறு கருத்­துச்­சொல்­ப­வர்கள் வச­தி­யாக மறந்து போய்­வி­டு­கின்­றனர். யார் என்ன சொன்­னாலும் சிறு­பான்­மை­யி­னரின் நல­னோம்­பும் ­வி­ட­யங்­களில் அந்த இனம் சார்ந்த ஒரு கட்­சியின் அவ­சி­யத்தை கடந்த கால வர­லா­றுகள் நினைவுபடுத்­து­கின்­றன.

பன்­முக கலாசா­ரத்­தையும், பல்­லின இனக்­கு­ழு­மத்­தையும் கொண்ட ஒரு­நாட்டில் பெரும்­பான்மை சமூ­கத்தை பிர­திநி­தித்துவப்ப­டுத்தும் கட்­சி­களின் செயற்­பா­டு­களே சிறு­பான்மை கட்­சி­களின் அவ­சி­யத்­தையும், தேவைப்­பா­டு­க­ளையும் தீர்­மா­னிக்­கின்­றன எனலாம். அந்­த­வ­கையில் இலங்­கையில் இரண்­டா­வது சிறு­பான்­மை­யான முஸ்லிம் சமூ­கத்­திற்­கான தனி­யான ஒரு கட்­சியின் தேவைப்­பாடு உண­ரப்­பட்ட ஒன்­றுதான். அதனை உணர்ந்தே பெருந்­த­லைவர் அஷ்ரப் இக்­கட்­சியை உரு­வாக்­கினார் எனலாம்.

பெருந்­த­லைவர் அஷ்ரப் அவர்­களின் நேரிய சிந்­தனை மற்றும் சமூ­கத்தின் மீதான அள­வு­க­டந்த பற்று இன்னும் சொல்­லப்­போனால் சிறு­பான்மை சமூ­க­மொன்­றி­னா­லேயே ஒடுக்­கப்­ப­டு­கின்ற, அடக்­கப்­ப­டு­கின்­ற ­ஒரு அநா­தை ­ச­மூ­க­மாக வாழ்ந்த முஸ்லிம் சமூ­கத்­திற்கு அடை­யா­ளத்­தையும் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றுத்­த­ரு­கின்­ற ­ஒரு அமைப்­பா­கவே இன்று பெரும் விருட்­ச­மாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் பேரி­யக்­கத்­தை ­தோற்­று­வித்தார். பெருந்­த­லைவர் அஷ்­ரபின் காலத்தில் மிகவும் கட்­டுக்­கோப்­பா­கவும், வீரி­ய­மா­கவும் இந்த இயக்கம் இயங்­கி­யது என்­ப­தை ­யா­ராலும் மறுக்­க­மு­டி­யாது. அந்த ஆளு­மையின் முன்னால் உயர்­பீட உறுப்­பி­னர்கள் மிகுந்த மரி­யா­தை­யோடும், கட்­சியின் ­போ­ரா­ளிகள் மிகுந்த பக்­தி­யோடும் செயற்­பட்­டார்கள். பெருந்­த­லைவர் அஷ்ரப் இன்று வரைக்கும் தேசிய மட்­டத்தில் பேசப்­ப­டு­வ­தற்­கான பிர­தான காரணம் அவ­ரிடம் இருந்த தலை­மைத்­துவப் பண்பும், ஆளு­மையும் ஆகும். எப்­போ­து­மே ­அ­டிமை சமூ­க­மா­க ­வா­ழு­கின்­ற ­ச­மூ­கத்தை தனித்­து­வத்­தோடு வாழும் கௌர­வ­மிக்க சமூ­க­மாக வாழு­கின்­ற ­ஒரு நிலையை உரு­வாக்­கு­வதே அவ­ரது கன­வாக இருந்­தது. ஒரு சமூ­கத்தின் குர­லாக சர்­வ­தேசம் வரைக்கும் இந்த சமூ­கத்தின் தேவை­களை அவ­லங்­களை எடுத்­துச்­சென்று அடை­யா­ளப்­ப­டுத்­தினார். இந்த சமூகம் பற்­றிய அவ­ரது கனவு மிகப்­பெ­ரி­ய­தாகும்.

பெருந்­த­லை­வரின் அகால மர­ணத்தின் பின்னர் பெருந்­த­லை­வ­ரால் ­அ­டை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட, அவரின் அரு­கா­மை­யி­லேயே அவ­ரது ஆசு­வா­சத்­துடன் கலந்து வாழ்ந்த இன்­றைய தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு அந்த இடம் கிடைத்­தது எனலாம். பெருந்­த­லை­வரின் காலத்தில் எதி­ரிகள் மறைந்­தி­ருந்தார்கள்.

தலை­வ­ரிடம் அகப்­பட்­டுக்­கொள்­வோ­மோ ­என்ற பயத்­தில் ­பம்­மிக்­கொண்­டு ­இ­ருந்­தனர். ஆனால் தலைவர் ரவூப் ஹக்­கீமின் காலத்தில் எல்­லாப்­பு­றத்­தி­லு­மி­ருந்­து ­வெட்டும், குத்தும், குழி­ப­றிப்­பும் ­இன்னும் கட்­சி­யையும் தலை­மையையும் எவ்­வா­றான வகையில் பல­வீ­னப்­ப­டுத்த முடி­யுமோ அதற்­கான எல்லா முஸ்­தீ­பு­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டன . உண்­மையில் பெருந்­த­லைவர் காலத்தில் இல்­லாத பிரச்­சி­னைகள் கட்­சிக்குள் எழு­வ­தற்கு பிர­தான காரணம் பதவி ஆசை, தலை­மைத்­துவ ஆசை, பொறாமை என்­ப­ன­வாகும். எத்­தனை  சவால்கள்  வந்த போதும் அத­னை ­சா­ணக்­கி­ய­மா­க ­கை­யா­ளு­கின்ற சிறந்த ஆளு­மை­யாக ரவூப் ஹக்கீம் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டார். அதற்­காக ரவூப் ஹக்கீம் விமர்­ச­னத்­திற்கு அப்­பாற்­பட்ட  ஒருவர் என்று யாரும் பிழை­யாக மொழி­பெ­யர்த்­து­விட வேண்டாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸின் ­பே­ராளர் மாநா­டு­க­ளை ­பெ­ருந்­த­லைவர் கட்­சியின் ­தொண்­டர்­களை போரா­ளி­களை வலு­வூட்டும் ஒரு நிகழ்­வா­க­வும் ­கட்­சியின் தலை­மைக்­கும் ­கட்­சியின் போரா­ளி­க­ளுக்கும் இடை­யி­லான இடைத்­தொ­டர்பை ­வ­ளர்­க்கின்ற நிகழ்­வா­கவும் பிராந்­தி­யத்தில் கட்­சிக்­கான தலை­வர்­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கும் கட்­சிக்கும் இடை­யி­லான உறவை மேம்­ப­டுத்தும்  நிகழ்­வா­கவும் நடாத்தி அதில் வெற்­றியும் பெற்றார். அந்­த­வ­கையில் தேசிய ரீதி­யாக இயங்கும் ஒவ்­வொரு கட்­சிக்கும் பேராளர் மாநா­டொன்றின் அவ­சியம் உண­ரப்­பட்­டுள்­ளது. அது அந்த கட்சின் இருப்பை உறு­திப்­ப­டுத்­தவும், அந்த கட்­சியின் போரா­ளி­களை வலுப்­ப­டுத்­தவும் ஏது­வாக அமையும்.

மேற்­சொன்ன வரை­ய­றை­களை கருத்­திற்­கொண்டு நாம் நோக்கும் போது தேசி­யத்தில் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களின் ஆத­ர­வைப்­பெற்ற ஒரு தேசிய கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இந்த பேராளர் மாநாடு அவ­சி­ய­மா­கின்­றது. அத்­தோடு அது பெருந்­த­லைவர் அஷ்­ரபின் அபி­லா­ஷை­களை உள்­ள­டக்­கி­ய­தாக அல்­லது அவ­ரது கனவை நன­வாக்கும் பாதையில் செல்­கி­றதா என்று ஆரா­யும்­போது அதற்கும் ஒரு சாத­க­மான பதி­லையே பெற்­றுக்­கொள்ள முடி­கி­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒவ்­வொரு பேராளர் மாநாடும் அதன் போரா­ளி­களை மைய­மாக வைத்தே நடாத்­தப்­ப­டு­கி­றது. ஏனைய தேசிய கட்­சி­க­ளை­யும்­விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பலமும் பல­வீ­னமும் அதன் போரா­ளி­கள்தான். கட்­சிக்குள் முரண்­பா­டுகள் எழு­கின்ற போதும் வெளியே இருந்து சவால்கள் எழுந்த போது­க­ளிலும் தலை­மைக்கு பக்­க­ப­ல­மாக இருந்து தலை­மை­யையும், கட்­சி­யையும் பாது­காத்த பெரும் சக்­தி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் போரா­ளி­களை கடந்த காலத்தில் கண்­டுள்ளோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் போரா­ளி­க­ளுக்கும் கட்­சியின் உயர்­பீ­டத்­திற்கும் இடை­யி­லான இடைத்­தொ­டர்பு இன்னும் ஆரோக்­கி­ய­மாக இல்லை. அத்­தோடு தேர்தல் காலத்தில் மட்­டுமே கட்­சியின் புன­ர­மைப்பு தொடர்பில் கரி­சனை கொள்­ளப்­ப­டு­கி­றது, பழைய போரா­ளிகள் புறக்­க­ணிக்­கப்­ப­டுத்தல் போன்ற சில குற்­றச்­சாட்­டுக்கள் கட்­சியின் மீது வைக்­கப்­ப­டு­கின்­றன.

இவற்றில் உண்மை இல்­லா­மலும் இல்லை. ஆனால் மாவட்ட அமைப்­பா­ளர்கள், தொகுதி அமைப்­பா­ளர்கள், வட்­டார அமைப்­பார்கள் இந்த குற்­றச்­சாட்டுகள் தொடர்பில் பதி­ல­ளிக்க கட­மைப்­பட்­டுள்­ளனர்.

சிறு­பான்மை சமூ­க­மொன்று­கான தனித்­து­வ­மான கட்­சி­யொன்றின் தேவைப்­பாட்டை சஹ்ரான் என்ற காட்­டு­மி­ராண்­டியின் அந்த மிலேச்­சத்­த­ன­மான உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூகம் அனு­ப­வித்த அவ­லங்­க­ளையும், அவ­மா­னங்­க­ளையும் நேர­டி­யாக அனு­ப­வித்­த­போது உண­ர­மு­டிந்­தது. பெயரில் மட்­டுமே முஸ்லிம் அடை­யா­ளத்தை தாங்­கி­யி­ருந்த சஹ்ரான் இஸ்­லாத்தில் இல்­லாத கொடூரம் ஒன்றை அரங்­கேற்­றிய சந்­தர்ப்­பத்தில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்றி கேள்­வி­ கேட்­டனர். இந்த இக்­கட்­டான சந்­தர்ப்­பத்தில் தமது அமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஓர­ணியில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் இணைந்து அதற்கு முகம் கொடுத்­தனர். இதன் மூலம் சஹ்ரான் என்ற தீவி­ர­வா­திக்கும் அமைதியை போதிக்கும் இஸ்­லாத்­திற்கும் எவ்­வித தொடர்­பு­மில்லை என்ற தமது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தி­யமை முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­ப­ட­வி­ருந்த பேர­ழி­வி­லி­ருந்து இறை அருளால் காப்­பாற்­றப்­பட்டோம். இதனை எந்த ஒரு முஸ்­லிமும் அத்­தனை சீக்­கிரம் மறந்­து­விட முடி­யாது. இந்­த­ வி­ட­ய­மா­னது ரவூப் ஹக்­கீமின் சாணக்­கி­யத்­திற்கு ஒரு எடுத்­துக்­காட்­டாகும்.

கொரோனாவில் மர­ணித்தவர்­களை உல­கமே நல்­ல­டக்கம் செய்­த­போது சர்­வ­தேச பரிந்­து­ரை­க­ளைக்­கூட கண்­டு­கொள்­ளாமல் எரித்து முஸ்லிம் சமூ­கத்தின் மத­நம்­பிக்கை மீது மண் அள்ளிப்போட்டபோது பாராளுமன்றமத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் ஆக்க பூர்வமான

முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் மேற்கொண்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளே. குறிப்பாக அலி ஸாஹிர் மௌலானாவின் வெள்ளைத் துணி போராட்டம் தேசியத்திலும், சர்வதேசத்திலும் பலத்த எதிரொலியை ஏற்படுத்தியது. பெரும்பான்மை சமூகத்தைக்கூட இந்த செயற்பாடு ஆகர்சித்தது எனலாம். இவ்வாறு முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அச்சமூகத்தின் நேரடி பிரதிநிதிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் நின்று செயற்பட்டு வருகிறது.

மிகவும் கடு­மை­யான கால­கட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 33ஆவது பேராளர் மாநாடு நடை­பெ­று­கி­றது. இந்த மாநாடு கட்­சியில் ஏற்­கெ­னவே உள்ள பிழைகள் சரி­செய்­யப்­பட்டு போரா­ளி­களின் எதி­பார்­ப்பு­க­ளையும், பெருந்­த­லைவர் அஷ்­ரபின் கன­வு­க­ளையும் நிறை­வேற்­று­கின்ற அளவில் நடை­பெ­றுமா என்ற பொது­வான கேள்வி நடு­நி­லை­யாக சிந்­திக்­கின்ற அர­சியல் விமர்­ச­கர்­க­ளுக்கு இருக்­கி­றது. எது எப்­ப­டியோ ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்­கி­ரசின் தூண்­க­ளான அதன் போராளின் விட­யத்தில் அச­மந்த போக்­குடன் இந்­தக்­கட்சி இருக்கக்கூடாது என்பதே பொதுப்படையான கருத்தாகும்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc