இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் மீண்டும் இடம்பெற கூடாது என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறிய, சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துக்கின்றது. இதை வேகமாக, உடனடியாக நிறுத்த வேண்டும்.
இங்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.அத்துடன் ஜனாதிபதி சமீபத்தில் புதுடெல்லி சென்ற போது அது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
நேற்று நடைபெற்ற துயரமான சம்பவம் மீண்டும் நடைபெற கூடாது, வீதிகளில் கைது செய்யப்படுவது வேறு, கடல்களில் கைது செய்யப்படுவது வேறு, கடற்பரப்பின் சுழல் காரணமாக இவ்வாறு பல பிரச்சனைகள் காணப்படுகிறது. அறிந்து கொண்டு மீண்டும் அத்துமீறி வருவது உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்.