மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளரின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புனித மரியாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் இன்று வியாழக்கிழமை (6) உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று இணைந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
1988ஆம் ஆண்டு யூன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் சமாதி புனித மரியாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அவரின் 36வது தினத்தையிட்டு மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று அன்னாரது சமாதியில் நினைவேந்தல் இடம்பெற்றது இதில் சர்வமத தலைவர்கள், வனபிதாக்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னரின் ஆத்மசாந்தி வேண்டி அவரின் சமாதியில் உள்ள திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி விசேட பிராத்தனையுடன் அஞ்சலி செலுத்தினர்.