காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியாய ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, “10 தாவரவியல் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது இதுவரை தாவரவியல் பூங்காக்கள் திட்டமிடப்பட்ட விதத்தில் காலி - அக்மீமன தாவரவியல் பூங்கா, வவுனியா தாவரவியல் பூங்கா, அம்பாறை, பொலன்னறுவை, தெனியாய ஆகிய இடங்களை நாம் இனங்கண்டுள்ளோம் எனவே, பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நாம் இவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.