கனடா, பிரம்டனில் (Brampton) பெண் ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், பிரம்டன், கொட்ரீச் பகுதியில் வைத்து பெண் ஒருவரை தாக்கி பலவந்தமாக வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிரிவி காணொளி
வாகன தரிப்பிடத்தில் குறித்த பெண்ணை தாக்கி கடத்திச் செல்லும் காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.