மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் ஆசியாவின் பிரமாண்ட நூலகத்திற்காக நூல்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று புத்தக திருவிழா என்னும் நிகழ்வின் ஊடாக புத்தகங்களை சேகரிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (Sivanesathurai Chandrakanthan) முயற்சியினால் மட்டக்களப்பில் இந்த பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட்டுவரும் நிலையில் அதன் நிர்மாண பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.
மூன்று இலட்சம் நூல்கள்
மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மு.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
குறித்த நூலகத்திற்கு மூன்று இலட்சம் நூல்களை பெறும்நோக்கில் இந்த செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்களையும் உதவுமாறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் “சிங்கள பேரினவாதிகளினால் யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சோகமான ஒரு நாள் இன்று.
நீங்கள் எதனை எரித்தாலும் பிழையான விடயங்கள் நிலைத்திருக்காது, சரியானவை சரியான இடத்தில் சேரும் என்பதை அப்படியானவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் மிகப்பெரும் செய்தியை வழங்கியுள்ளதாகியுள்ளார்கள்.
பொதுநூலக திறப்பு
மூன்று இலட்சம் நூல்களுடன்தான் பொதுநூலகம் திறக்கப்படும். நாங்கள் திறப்பது புத்தக சாலை. அதனை திறப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
பாடசாலை கல்வியை கற்று வைத்தியராகவும் பொறியியலாளராகவுரும் வருவது கல்வித்துறையின் அடிப்படை விடயம்.கண்டுபிடிப்புகள் புதிய மாற்றங்கள் மூலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து பேரறிஞ்சர்களை உருவாக்குவதுதான் புத்தகங்களின் பணியாகும்.அந்த பணிக்கான அத்திபாரத்தினையே நாங்கள் இடுகின்றோம்” என்றார்.