கனடாவில் இந்திய மாணவர்கள் பலரை ஏமாற்றியதாக இந்திய பிரஜை ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து கனடாவில் கற்பதற்காக விண்ணப்பம் செய்த மாணவர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
37 வயதான பிரிஜேஷ் மிஸ்ரா என்ற நபரே இவ்வாறு நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
வாங்கூவார், நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிஸ்ராவை கனடிய எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
மிஸ்ரா சுற்றுலா வீசாவில் கனடாவிற்குள் பிரவேசித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்களுக்கு அனுமதி பெற்று கொடுக்க போலி கடிதங்களை தயாரித்துக் கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளை மாற்ற முடியாது என்ற போதிலும் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம் பெறுவதனை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிஸ்ராவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால் மிஸ்ராவுக்கு இன்னும் 19 மாதங்கள் தண்டனை காலம் அனுபவிக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக கட்டணங்கள், வகுப்பு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை இந்த நபர் மாணவர்களிடம் பெற்றுக் கொண்ட போதிலும் அவற்றை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தண்டனைக் காலம் முடிந்தவுடன் மிஷ்டா நாடி கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.