கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் மதுபான விற்பனை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளிலும் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.