வெசாக் பண்டிகையை முன்னிட்டு பாணந்துறை பிரதேசத்தில் நாய்க் குட்டிகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
வீதியோரங்களில் உள்ள ஆதரவற்ற நாய்க் குட்டிகளே இவ்வாறு தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த நாய்க் குட்டிகளானது சட்டரீதியான முறையில் பொதுமக்களுக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த வெசாக் தானத்தினை ஏற்பாடு செய்திருந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த 4 வருட காலமாக பாணந்துறையில் உள்ள வீதியோரங்களில் காணப்படும் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளித்து வருகின்றோம். இதனை நாங்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரும்பாலான நாய்க்குட்டிகளை விகாரைகளில் விட்டுச் செல்கின்றனர். நாங்கள் இந்த நாய்க் குட்டிகளுக்குத் தினமும் உணவு கொடுத்தாலும் இவற்றிற்கு நிரந்தரமான வீடுகளோ உரிமையாளர்களோ இல்லை. எனவே இந்த ஆதரவற்ற நாய்க் குட்டிகளை பொதுமக்களுக்கு வெசாக் தானமாகப் வழங்க நாங்கள் அனைவரும் தீர்மானித்தோம் என்றார்.