வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 10 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.
ஜனாதிபதியால் இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும்(23) நாளையும்(24) கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் கொண்டு வரும் உணவு, இனிப்பு பண்டங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒருவருக்கு மாத்திரம் போதுமானளவு கொண்டு வருமாறு உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.