யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஓராண்டு கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
இந்நிலையில், அந்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், இன்றைய தினமும் (23.05.2024) போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.