கனடாவில் அதிகளவில் கிராக்கி நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையக் கூடும்.
எதிர்காலத்தில் மிகவும் கிராக்கி ஏற்படக்கூடிய தொழில்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆய்வாளர், பொறியிலாளர், செயற்கை நுண்ணறிவு தரவு ஆய்வாளர், ரோபோ பொறியியலாளர், செயற்கை நுண்ணறிவு உற்பத்தி முகாமையாளர், இயந்திரக் கற்றல் பொறியியலாளர், செயற்கை நுண்ணறிவு ஒழுக்க நெறி பொறியியலாளர், தரவு விஞ்ஞானி உள்ளிட்ட பதவி வெற்றிடங்களுக்கு கூடுதல் கிராக்கி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதவி வெற்றிடங்களுக்கு 70000 முதல் 150000 டொலர்கள் வரையில் வருடாந்த சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவுசார் தொழில்துறைகளில் மிகவும் கிராக்கி நிலவும் தொழில்களாக பின்வருவனவற்றை பட்டியலிட முடியும்.
1. AI Research Scientists
2. Machine Learning Engineers
3. Data Scientists
4. Manager of AI Products
5. NLP (natural language processing)) Engineer
6. Engineer in Computer Vision
7. AI Ethics Specialist
8. AI Solution Architect
9. Robotics Engineer
10. AI Data Analyst