இலங்கை அரசாங்கம் நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் மரணம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடன் மிகவும் நெருக்கமான செயற்படும் நாடாக ஈரான் உள்ளது. இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஈரானிய ஜனாதிபதி உமா ஓய திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.