பொலிஸாரை ஏவிவிட்டு கொலைக் கலாசாரத்தின் நாயகர்களாக அரசியல் செய்கின்றவர்களின் முகமூடிகள் அகற்றப்படல் வேண்டும் என மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் (Gandiya Jagadas) தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
"முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பொலிஸார் சாதாரண மக்களைப் போல் நடந்து கொள்ளாமல் ஒரு அடாவடிக் கும்பலைப் போன்று செயற்பட்டுள்ளார்கள்.
கஞ்சிப்பானையை காலால் தட்டி வீழ்த்தி, அடுப்பினுள்ளே நீரூற்றி மிகவும் சிறுமைத்தனமான முறையில் பொலிஸார் எனப்படுகின்ற இலங்கை அரசின் ஏவல் அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துக்கொண்டுள்ளார்கள்
எனவே, இந்த மண்ணிலே இருந்து கொண்டு பொலிஸாரை ஏவிவிட்ட கொலைக் கலாசாரத்தின் நாயகர்களாக அரசியல் செய்கின்றவர்களின் முகமூடிகள் அகற்றப்படல் வேண்டும்" என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,