கனடாவில் (Canada) வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கனேடிய வீட்டு மனை ஒன்றியத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வீட்டு விற்பனை 1.7 விதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வீடு விற்பனை செய்வதற்காக பட்டியலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகம் என்ற போதிலும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய வீட்டுச் சந்தை
இந்நிலையில் கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் கனேடிய வீட்டுச் சந்தையில் சமநிலையாக காணப்பட்ட காலப்பகுதியாக இந்த காலப்பகுதி கருதப்படுவதோடு, கடந்த மூன்று மாத காலமாக கனேடிய வீடுகளின் விலை ஸ்திரமான நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடகு கடன் தொகை வட்டி வீதம் போன்ற ஏதுக்களினால் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான நாட்டம் குறைந்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீடு ஒன்றின் சராசரி விலை 703446 டொலர்கள் என கூறப்படுகிறது.