இலங்கையின் பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கை உட்பட சர்வதேச தரப்புகளினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்த வகையில் கனேடிய அரசியலின் முக்கிய பிரதிநிதியும் சுகாதார அமைச்சருமான மார்க் ஹொலண்ட்டினால்(Mark Holland) அவரது அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அர்த்தமற்ற வன்முறை
இது தொடர்பில் அவர் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
''தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், முள்ளிவாய்க்கால் மற்றும் இலங்கையில் ஆயுதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்பதோடு, கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இந்த அர்த்தமற்ற வன்முறையின் தாக்கத்துடன் தொடர்ந்து வாழ்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.