ரொறன்ரோவில் வாழ்வதற்காக மக்கள் பல்வேறு தியாகங்களை செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு வாடகைத் தொகையை செலுத்தி மிகவும் சிறிய இடங்களில் வாழ நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகள் நிர்மானிக்கப்படும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவ்வாறு நிர்மானிக்கப்படும் வீடுகளும் சிறியளவு வீடுகளே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரம் சதுர அடிப் பரப்பில் காணப்பட்ட சில குடியிருப்புக்களின் அளவு தற்பொழுது 300 சதுர அடிகளாக குறைவடைந்துள்ளது.
ரொறன்ரோவில் வாழும் மக்கள் தங்களது வசதிகளை இழந்து கூடுதல் தொகை செலுத்தி வீடுகளில் குடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.