கனடாவில் வாகனத் திருட்டில் ஈடுபடுவோருக்கு புதிய தண்டனை விதிக்கப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வாகனத் திருட்டில் ஈடுபடும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்திற்கு நீண்ட கால தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண போக்குவரத்து அமைச்சர் ப்ராம்பீட் சர்காரீயா மற்றும் தலைமை வழக்குரைஞர் மைக்கல் கெரென்ஸீர் ஆகியோர் இந்த புதிய சட்ட ஏற்பாடு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
வாகனக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு பத்தாண்டுகள் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், இரண்டாவது தடவை தவறிழைத்தால் அந்த தடையை 15 ஆண்டுகளாக நீடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாக வாகனக் கொள்ளையில் ஈடுபடுவோரது ஓட்டுனர் உரிமத்தை வாழ் நாள் முழுவதிலும் தடை செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் கார் ஒன்று களவாடப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.