கனடாவில் நீதிபதிகளுக்கு நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ரொறன்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெண் ஒருவரை பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த நபருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற சில வாரங்களுக்கு முன்னதாக குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எம்ரோன் கொன்ஸ்டானின் என்ற நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கெதரீன் ரிஹிநிலாண்டர் என்பவருக்கு எதிராக பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் அமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டிய உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கொன்ஸ்டானின் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி கொன்ஸ்டானின் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் இல்லாத காரணத்தினால் இந்த குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.