ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) பல பில்லியன் டொலர் அன்பளிப்பு நிதியின் கீழ் 2025ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு மானியங்களைப் பெறும் வளரும் நாடுகளில் இலங்கையின் (Sri Lanka) பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது
ஆசிய அபிவிருத்தி நிதியம், ஏழை நாடுகளில் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு அபாயத்தைக் குறைப்பதற்காக மானியங்களை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் இந்த திட்டத்தின்கீழ் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய மானியத் தொகை தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இலங்கைக்கு மானியங்கள்
எனினும், நிதியத்திலிருந்து மானியம் பெறுபவதாக இலங்கை தெரிவு செய்யப்படுவது இது முதல் தடவையல்ல.
இலங்கையை தவிர அண்டை நாடுகளில் மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான், பிஜி, டோங்கா, கிரிபதி, சமோவா, நவுரு, பலாவ் மற்றும் பப்புவா நியூ கினியா உட்பட்ட 28 நாடுகள் மானியம் பெறும் நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றம், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்த நிதியத்தில் இருந்து இலங்கைக்கு மானியங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.