மாத்தறையில் மருத்துவமனையொன்றில் மின்னல் தாக்குதல் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை வலஸ்முல்லை பகுதியிலேயே நேற்று (10.05.2024) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்னல் தாக்குதல் காரணமாக பரவிய தீயின் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு சேதமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சை
இதனையடுத்து, குறித்தவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த மூன்று நோயாளிகள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் தீயின் காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த விலையுயர்ந்த சிகிச்சை கருவிகள் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.